உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜாய்ஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் செர்குய்ரா ரோமியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இவர் காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவா உடன் மோத உள்ளார்.
ஆசிய கோப்பை: பும்ரா இல்லை.. அந்த இந்திய பவுலர்தான் அசத்துவார் - ரவி சாஸ்திரி
இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகிய திறமையான வீரர்களால் வலுவானதாக உள்ளது.
காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 2 வீரர்கள் வீர மரணம் - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷமீரின் குலகாம் மாவட்டத்துக்கு உட்பட்ட கடார காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் காஷ்மீர் போலீசாரைக்கொண்ட கூட்டுப்படையினர் நேற்று அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி வீரர்கள் முன்னேறியபோது. அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சச்சின் - விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்..? வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் தேர்வு
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயிலிடம் சச்சின் - விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கிறிஸ் கெயில், 'சச்சின்' என கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு - பிரதமர் பிராங்காய்ஸ் ராஜினாமா
மொத்தமுள்ள 573 உறுப்பினர்களில் 364 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பிராங்காய்ஸ் பாய்ரு தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதுவரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இப்போது புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அதிபர் மேக்ரோனுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் ஆப்பிள் வருடாந்திர நிகழ்வு.. ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் ஆகிறது
உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இன்று நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை: அதிக ரன், விக்கெட் வீழ்த்தப்போகும் வீரர்கள் யார்-யார்..? தினேஷ் கார்த்திக் கணிப்பு
ஆசியக்கோப்பை தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
தேர்தல் சுற்றுப்பயணம்: நீதிமன்றத்தை நாட தவெக தலைவர் விஜய் முடிவு?
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். இதன்படி வரும் 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார்.
திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கி அரியலூர், குன்னம் பெரம்பலூர் பகுதிகளிலும் பிரசார பயணத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார். 'தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
குருவாயூர், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்
திருச்சி கோட்ட ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் -மயிலாடுதுறை மெமு ரெயில் வருகிற 13, 20 மற்றும் 27-ந் தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து 25 நிமிடம் தாமதமாக மதியம் 2.35 மணிக்கு புறப்படும்.
குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16, 23 மற்றும் 30-ந் தேதிகளில் வழியில் தேவையான இடத்தில் 30 நிமிடம் நிறுத்தப்படும். மயிலாடுதுறை திருச்சி மெமு ரெயில் வருகிற 10, 11, 12, 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தஞ்சாவூர், திருவாரூர், தேனி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.