இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-08-11 09:27 IST


Live Updates
2025-08-11 14:19 GMT

தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

மதுரையில் 21ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

2025-08-11 14:15 GMT

விமான நிலையத்தில் அல்லு அர்ஜுனை தடுத்த பாதுகாப்பு ஊழியர்கள்...காரணம் என்ன?

மும்பை விமான நிலையத்தில் அல்லு அர்ஜுனுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் மாஸ்க் மற்றும் கண்ணாடியுடன் அல்லு அர்ஜுன் நுழைந்தபோது பாதுகாப்பு ஊழியர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். மாஸ்க் மற்றும் கண்ணாடியை கழற்றி முகத்தைக் காட்டச் சொன்னார்கள்.

அவரது தனிப்பட்ட ஊழியர்கள் அவர் அல்லு அர்ஜுன் என்று சொன்னபோதும், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய ஊழியர்கள் அவரை முகத்தைக் காட்டச் சொன்னார்கள். பின்னர் தனது மாஸ்க் மற்றும் கண்ணாடியைக் கழற்றி முகத்தைக் காட்டிவிட்டு அவர் உள்ளே சென்றார்.

2025-08-11 14:00 GMT

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். "இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி மாலை 5 மணி வரை டிஆர்பி இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். http://trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நவ 1-ம் தேதி முதல் தாளுக்கான போட்டி தேர்வும் நவ-2.ம் தேதி இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

2025-08-11 13:56 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீழ்குடி கிராமத்தில், ஆற்றில் குளித்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சடலங்களைக் கைப்பற்றி, உயிரிழந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-08-11 13:55 GMT

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

2025-08-11 13:52 GMT

 சேலம்: மேட்டூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ரத யாத்திரைப் பயணம் தொடங்கினார்

2025-08-11 13:50 GMT

சென்னை கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றம் வரை மற்றும் கிண்டி முதல் வேளச்சேரி வழியே தாம்பரம் வரை மெட்ரோ வழித்தட திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டது.

2025-08-11 13:38 GMT

குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய வரலட்சுமி...குவியும் பாராட்டு

நடிகை வரலட்சுமி , எச்எச்எச் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழித்த அனுபவத்தைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

2025-08-11 12:31 GMT

குட்டி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ''ஸ்பைடர் மேன்''... - வீடியோ வைரல்

படப்பிடிப்பின்போது குட்டி ரசிகர் ஒருவருடன் ''ஸ்பைடர் மேன்'' பட நடிகர் டாம் ஹாலண்ட் புகைப்படம் எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்