கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி திடீர் ராஜினாமா
கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஓட்டு திருட்டுப் புகார் தொடர்பாக சொந்த கட்சியான காங்கிரசை கர்நாடக கூட்டுறவு மந்திரி ராஜண்ணா விமர்சித்திருந்தார்.
கர்நாடக மந்திரி கே.என். ராஜண்ணா, ராகுல் காந்தியை விமர்சித்ததாகக் கூறப்படும் கருத்துகளுக்காக, காங்கிரஸ் உயர்மட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில் ராஜண்ணா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜினாமா செய்த ராஜண்ணா,முதல்-மந்திரி சித்தராமையாவின் நன்கு அறியப்பட்ட ஆதரவாளர் ஆவார்.
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்- இந்திய வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். அணுசக்தி மிரட்டல் விடுப்பது பாகிஸ்தானுக்கு வழக்கமான ஒன்றுதான். இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் பேச்சுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.3 கோடி மோசடி நடந்ததுள்ளது. இது தொடர்பாக வங்கியின் மேலாளர் விஜயலட்சுமி உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்ற 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
''தி டார்க் நைட்'' பட தமிழ் ரீமேக் - ஜோக்கராக விஜய் சேதுபதி...பேட்மேனாக யார் தெரியுமா?
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் புஷ்கர் காயத்ரி ''தி டார்க் நைட்'' படத்தை தமிழில் ரீமேக் பண்ணும் வாய்ப்பு கிடைத்தால் அதில் பேட்மேனாக நடிக்கத் தகுதியானவர் அஜித்தான் என்றும் ஜோக்கராக விஜய் சேதுபதியை நடிக்க வைப்பேன் எனவும் கூறினார்.
கவனத்தை ஈர்க்கும் ஸ்ரீலீலா...வைரலாகும் ''மாஸ் ஜாதரா'' பட டீசர்
ரவி தேஜாவும் ஸ்ரீலீலாவும் ''மாஸ் ஜதாரா''வின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர தயாராகி வருகின்றனர். வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரவி தேஜா ஒரு நேர்மையான ரெயில்வே போலீஸ் அதிகாரியாகவும் ஸ்ரீலீலா ஒரு அப்பாவியான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
ராகுல் காந்தி கைது: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
''ஸ்பிரிட்'' படத்தில் இணையும் பிரபல இயக்குனரின் மகன்?
இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் மகன் ரிஷி மனோஜ், ''ஸ்பிரிட்'' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளதாக வதந்தி ஒன்று ஆன்லைனில் பரவி வருகிறது.
காரைக்குடி - ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக காரைக்குடி - ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.