AI Assistant-ஐ மந்திரியாக நியமித்த முதல் நாடாக மாறியுள்ளது அல்பேனியா
உலகிலேயே முதல்முறையாக அல்பேனியாவில் ஊழலை எதிர்த்துப் போராட, 'டையிலா' என்ற (ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மந்திரி ) Al Assistant ஏஐ மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. அரசு டெண்டர்களில் ஊழல் இல்லாத நிலையை உருவாக்க பொது கொள்முதல் அமைச்சராக டையிலா-வை நியமித்து அந்நாட்டு பிரதமர் எடி ரமா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் வெகுவாக குறைவு
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் வெகுவாக குறைந்து நாட்டிலேயே 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2021ம் ஆண்டில் ஒரு லட்சம் மகப்பேறுக்கு 38ஆக இருந்த இறப்பு விகிதம் தற்போது 35ஆக குறைந்துள்ளது. இந்திய அளவில் மகப்பேறு இறப்பு ஒரு லட்சத்திற்கு 88ஆக உள்ளது.
என்எல்சி 3வது சுரங்கம் வரக்கூடாது - அன்புமணி
என்எல்சி 3ஆவது சுரங்கம் இங்கு வரக்கூடாது. ஏற்கெனவே 40,000 ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளது; 26 கிராமங்களைக் காப்பதுதான் எனது வேலை. அதற்குதான் இங்கு வந்திருக்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான வேலையை விவசாயத்துறை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என 26 கிராம மக்கள் பேனர் வைக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
அபிஷேக் பச்சனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
அபிஷேக் பச்சன் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. வணிக லாபத்திற்காக அபிஷேக் பச்சனின் பெயர், ஏஐ புகைப்படங்கள் , குரலை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
கருத்துக்கேட்பு கூட்டம் ரத்து; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கருத்துகேட்பு கூட்டம் ரத்து உள்ளூர் சமூகங்களின் உரிமையை பறிக்கும் செயல். செப்-8ம் தேதியிட்ட குறிப்பாணையை உடனடியாக திரும்பபெற வேண்டும். சுரங்கத்திட்டத்தில் மக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு தரும் முடிவை கைவிட பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலம் 'மூணாறு'
கேரளாவின் மூணாறு மலைப்பகுதி ஆசியாவின் சிறந்த கிராமப்புற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகோடா பயண தளம் வெளியிட்டுள்ள பட்டியலில், முதலிடத்தில் மலேசியாவின் கேமரன் மலையும், 7-வது இடத்தில் மூணாறும் இடம்பிடித்துள்ளன.
வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை (சனிக்கிழமை) முதல் திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்கிறார். அன்றைய தினம் மாலை அரியலூர், குன்னம், பெரம்பலூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் சத்திரம் பஸ் நிலையத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி தர வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்திருந்தார்.ஆனால் அங்கு அனுமதி தர மறுத்த போலீசார் திருச்சி மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர்.
பஞ்சாப் வெள்ளம் - உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். கிட்டத்தட்ட 1,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது - இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு
இனி பாலஸ்தீனம் என்ற ஒரு பகுதியே இருக்காது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. பாலஸ்தீன நாடு இருக்காது என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற போகிறோம். நாங்கள் எங்கள் பாரம்பரியம், எங்கள் நிலம் மற்றும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
''காஞ்சனா 4'' - வெளியான ராகவா லாரன்ஸின் ஹாரர் பட அப்டேட்
''காஞ்சனா'' திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான ஹாரர் படங்களில் ஒன்று இப்படத்திற்கு பெரும் ரசிகர்கள் உள்ளனர்.