இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Sept 2025 8:00 PM IST
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி தேர்வு
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நாடாளுமன்ற அவை கலைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12 Sept 2025 7:36 PM IST
'லோகா' யுனிவெர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்கள்...அறிமுகப்படுத்திய படக்குழு
'லோகா' யுனிவர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான ''லோகா - சாப்டர் 1'', பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் டொமினிக் அருண் இயக்கியுள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- 12 Sept 2025 7:12 PM IST
விஜய் வர்மாவுடனான பிரிவிற்குப் பிறகு...''சரியான வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன்'' - தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வாலம் வருபவர் தமன்னா. இவர், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில் காதல் முறிந்தது.
- 12 Sept 2025 6:23 PM IST
சிவகார்த்திகேயனின் ''பராசக்தி'' ரிலீஸ் தேதி அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.
- 12 Sept 2025 6:21 PM IST
நெல்லை: ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. சரவணன், ஜாமின் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதி நடக்க உள்ளது
- 12 Sept 2025 6:19 PM IST
கிரேன் வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு
கன்னியாகுமரி: ரெயில் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கிரேன் வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். போலீசார் விசாரணையில் அதன் ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. குமரிமுனைப் பகுதியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி முகமது மற்றும் கேட்டரிங் மாணவர் சபரி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
- 12 Sept 2025 6:04 PM IST
'காதி' பட தோல்விக்கு பின்...அனுஷ்கா எடுத்த முடிவு - ரசிகர்கள் வருத்தம்
நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக ஊடகங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார். சக நடிகைகளைபோல சமூக வலைதளத்தில் இவர் ஆக்டிவாக இருந்ததில்லை என்றாலும், சமீபத்தில் தனது ''காதி'' படத்தை விளம்பரப்படுத்த எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்தினார்.
- 12 Sept 2025 5:25 PM IST
நடிப்புக்கு திருமணம் தடையில்லை...நிரூபித்த நடிகைகள்
திருமணத்திற்குப் பிறகு நடிகைகளின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எப்போதுமே விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆனால், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிப்புக்கு திருமணம் தடையாகாது என்பதை நிரூபித்துள்ளனர்.
- 12 Sept 2025 5:15 PM IST
இசைஞானி இளையராஜா பாராட்டு விழாவுக்காக பிரத்யேக பேருந்து
இசைஞானி இளையராஜா பொன் விழாவுக்கு வரும் இசைக்கலைஞர்களை அழைத்து செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் தயாராக உள்ளது பிரத்யேக பேருந்து.
- 12 Sept 2025 5:05 PM IST
முன்பு ஓட்டலில் வேலை...இப்போது ஒரு படத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் - யார் அந்த நடிகர் தெரியுமா?
தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இவர் இருக்கிறார். 1967-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், நடிகராவதற்கு முன்பு, பாங்காக்கிற்குச் சென்றார். அங்கு அவர் ஓட்டலில் பணியாற்றினார். பின்னர் மும்பைக்கு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.















