சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 7-வது நாளாக தர்ணா போராட்டம்
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகம் அருகில் இன்று 7-வது நாளாக, பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதாகைகள் ஏந்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் நடுவே, (போராட்ட களத்தில் இருந்து) பகுதி நேர ஆசிரியர்கள் திடீரென சாலையை நோக்கி ஓடி, சாலையின் நடுவே அமர்ந்தும், சாலையில் படுத்தும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் சிலர், இந்த பகுதியில் சென்ற அரசு பேருந்தை மறித்து, பேருந்தின் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனால், போலீசார் விரைந்து சென்று அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர். ஆயினும் சில ஆசிரியர்கள் போலீசாரிடம் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்யும் விதமாக போலீஸ் பஸ்சில் ஏற்றினர்.
விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் பயணம் தயாரான நிலையில், டிராகன் விண்கலம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொழில் நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், குறிப்பிடப்பட்ட 4.35 மணிக்கு பதிலாக சிறிது நேரம் கழித்து இயக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், 10 நிமிட காலதாமதத்திற்கு பின்னர் 4.45 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்துள்ளது.
விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் பயணம் தயாரான நிலையில், டிராகன் விண்கலம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. தொழில் நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், குறிப்பிடப்பட்ட 4.35 மணிக்கு பதிலாக சிறிது நேரம் கழித்து இயக்கப்படும் என தெரிகிறது.
பழம்பெரும் நடிகை நடிகை சரோஜா தேவி (87) வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா துறையை சேர்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
தெலுங்கானாவில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பி.ஆர். கவாய்க்கு அதன் பின்னர், கடுமையான தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதில், சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஓரிரு நாட்களில் அவர் பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டி தீப்பிடித்தது
ரெயில் நிலையத்திற்கு கிழக்கே பீமாஸ் ரெசிடென்சி ஹோட்டலுக்குப் பின்னால் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டி திடீரென தீப்பிடித்தது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ விபத்து குறித்து திருப்பதி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிராகன் விண்கலத்திற்குள் சென்றார் சுபான்ஷு சுக்லா
விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் இந்திய விண்வெளி வீரர் சுபாஷ் ஷு சுக்லாவுடன் மற்ற 3 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர். நாசாவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கவு ஆகியோர் பயணம் மேற்கொள்கின்றனர்.
மாலை 4.35 மணிக்கு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்ஹ்டில் இருந்து தனியாக பிரிக்கப்படும். மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கிய தனது 24 மணி நேர பயணத்தை தொடங்கும். நாளை மதியம் 3 மணியளவில் கலிபோர்னியா கடற்கரையில் விண்கலத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் புறப்படுகிறது.
3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்
கோவா, அரியானா ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
* அரியானா மாநில கவர்னராக ஆஷிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கோவா மாநில கவர்னராக பசுபதி அசோக் கஜபதி ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* லடாக் துணை நிலை கவர்னராக கவிந்தர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லடாக் துணை நிலை கவர்னராக இருந்த பி.டி.மிஷ்ராவின் ராஜினாமா ஏற்றுகொள்ளப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மாற்றம்
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகிக்கும் கல்யாண சுந்தரம் எம்.பி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாவட்ட பொறுப்பாளராக சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.