இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025

Update:2025-09-15 08:58 IST
Live Updates - Page 4
2025-09-15 04:52 GMT

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், உண்மையாக உழைத்தவர் அண்ணா - விஜய் புகழாரம்

மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா; இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், உண்மையாக உழைத்தவர். மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த அண்ணாவை, அவரது பிறந்த‌நாளில் போற்றி வணங்குவோம் மக்களிடம் செல் என்ற அண்ணாவின் அரசியல் மந்திரத்தை பின்பற்றி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக்காட்டுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

2025-09-15 04:50 GMT

இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு

இன்று முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்த முடியும். தனிநபர் யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு, ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாக மாற்றமின்றி தொடர்கிறது.

2025-09-15 04:48 GMT

தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

திருச்சியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடந்ததாக கூறி தவெக நிர்வாகிகள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்டோண்மென்ட், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் ஆகிய 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025-09-15 04:41 GMT

''நான் இப்படி செய்வேன் என்று நினைத்ததே இல்லை''- கீர்த்தி சனோன்

திரிஷா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நடிகைகள் தங்கள் உடலில் பச்சை குத்தி இருக்கும்நிலையில், சில நடிகைகள் அவ்வாறு செய்ததே கிடையாது. அதில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் ஒருவர்.

ஆனால், இதுவரை அதில் இருந்து விலகி இருந்த கீர்த்தி சனோன், முதல் முறையாக பச்சை குத்தி இருக்கிறார். அவரது கணுக்காலில் கொண்டிருக்கும் ஒரு பறவையை பச்சை குத்தி இருக்கிறார். 

2025-09-15 04:16 GMT

"அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன் - செங்கோட்டையன்

அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற எல்லாரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

2025-09-15 04:14 GMT

வாரத்தின் முதல் நாளில் சற்று குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?


பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.

2025-09-15 04:13 GMT

பி.எம்.டபிள்யூ. கார் மோதி நிதியமைச்சக துணை செயலர் பலி

அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ. கார் மோதியதில் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை துணை செயலர் நவ்ஜோத் சிங் பலியானார். நவ்ஜோத் சிங் மனைவி உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

2025-09-15 03:51 GMT

கோளாறு - அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை வடலா பகுதியில் மோனோ ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.

2025-09-15 03:44 GMT

ஈடு இணையற்ற தலைமகன் அண்ணா - எடப்பாடி பழனிசாமி

அண்ணாவின் வழியில் இதய தெய்வங்களின் நல்லாசியோடு தமிழகம் மீட்போம் பேரறிஞர் அவர்களின் புகழை போற்றுவோம் "ஈடு இணையற்ற தலைமகன் அண்ணா” சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகன் அண்ணாவின் பிறந்தநாள் இன்று; தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல் நம் அண்ணா அண்ணாவை பெயரில், கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகள் பெருமையோடு ஏந்தி நிற்கிறது அதிமுக; தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா; அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2025-09-15 03:44 GMT

பஹல்காம் வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - சூர்யகுமார் யாதவ்

பஹல்காம் மோதல் காரணமாக, ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வரவில்லை. பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்; நமது ஆயுதப்படை வீரர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறோம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்