இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025


இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
x
தினத்தந்தி 15 Sept 2025 8:58 AM IST (Updated: 16 Sept 2025 8:54 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 15 Sept 2025 7:49 PM IST

    ஆசிய கோப்பை: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஹாங்காங் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அணி இலங்கை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

  • 15 Sept 2025 7:48 PM IST

    10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • எண்ணை வாங்கும் விவகாரம்: இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது - அமெரிக்காவுக்கு ரஷியா பதிலடி
    15 Sept 2025 6:22 PM IST

    எண்ணை வாங்கும் விவகாரம்: இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது - அமெரிக்காவுக்கு ரஷியா பதிலடி

    மாஸ்கோ,

    ரஷியாவில் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் 50 சதவீத வரி விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளது. அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது. ரஷியா-இந்தியா இடையேயான நீண்டகால நட்பு கலாசாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையோன உறவை முறிக்க முடியாது. இதற்கான எந்தவொரு முயற்சியும் தோல்வி அடையும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • நாய்க்கடியால்  கடந்த 8 மாதங்களில் 22 பேர் உயிரிழப்பு
    15 Sept 2025 4:26 PM IST

    நாய்க்கடியால் கடந்த 8 மாதங்களில் 22 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் 3.60 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் ரேபிஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், ரேபிஸ் உயிரிழப்பை குறைக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு - காவல்துறைக்கு உத்தரவு
    15 Sept 2025 3:34 PM IST

    ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு - காவல்துறைக்கு உத்தரவு

    ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடக்கும்போது டிஜிபி-யின் வழிகாட்டு உத்தரவை காவல்துறையினர் முறையாக பின்பற்ற வேண்டும். ஆம்புலன்ஸ் ஓட்டுனர், ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரிய வழக்கில் மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது. அவசரகால வாகனங்கள் தடையின்றி செல்ல முன்கூட்டியே திட்டமிட்டு உறுதிப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • ராமதாஸ் இருக்குமிடம்தான் பாமக - பாமக எம்.எல்.ஏ. அருள்
    15 Sept 2025 3:24 PM IST

    ராமதாஸ் இருக்குமிடம்தான் பாமக - பாமக எம்.எல்.ஏ. அருள்

    ராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இருக்குமிடம்தான் பாமக பாமகவின் பொதுக்குழுவை அன்புமணி கூட்டியதே சட்டவிதிப்படி தவறு. அந்த பொதுக்குழுவில் அன்புமணியை தலைவராக தேர்வு செய்ததை எப்படி ஏற்க முடியும்? என பாமக எம்.எல்.ஏ. அருள் கேள்வி எழுப்பி உள்ளார்.

  • யு.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர் கைது
    15 Sept 2025 2:27 PM IST

    யு.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர் கைது

    சென்னை : திருவிக நகரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேசிய ராணுவ அகாடமிக்கு யு.பி.எஸ்.சி தேர்வு எழுத வந்தவர் கைது செய்யப்பட்டார். தேர்வுக்கு வந்தவர் ஆடைக்குள் செல்போனை மறைத்து வைத்து கேள்விக்கு விடை தேடிய போது சிக்கினார்.

  • கஞ்சா வைத்திருந்த இளம்பெண் கைது
    15 Sept 2025 2:25 PM IST

    கஞ்சா வைத்திருந்த இளம்பெண் கைது

    சென்னை திரு.வி.க நகரில் கஞ்சா வைத்திருந்த 23 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த 17 வயது சிறுவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் இவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சா, 1 கிலோ கஞ்சா மற்றும் ரூ.90,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story