இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

Update:2026-01-22 09:56 IST
Live Updates - Page 2
2026-01-22 06:47 GMT

போரால் சீரழிந்த உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு... அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளை தர தயார்: புதின் 


காசா போர்நிறுத்த ஒப்பந்த திட்டம் தொடர்பான அமைதி வாரியத்திற்கு ரஷியா 100 கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கும் என புதின் கூறினார்.

2026-01-22 06:46 GMT

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு 


கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

2026-01-22 06:45 GMT

தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து.. கர்நாடக சட்டசபையில் இருந்தும் கவர்னர் வெளிநடப்பு 


கவர்னரின் செயலுக்கு எதிராக ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க முதல்-மந்திரி சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

2026-01-22 06:44 GMT

சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்! 


நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

2026-01-22 06:43 GMT

தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா; சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல் 


எலவம்பட்டி, மதுரா மைக்காடு மற்றும் ஜெகன்நாதன் வட்டம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது பற்றி எம்.எல்.ஏ. நல்லதம்பி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். 

2026-01-22 06:14 GMT

24-ந்தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது என அறிவிப்பு 


மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பிராட்வே பேருந்து நிலையம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-01-22 06:12 GMT

கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது: சுப்ரீம் கோர்ட்டு வேதனை 


கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

2026-01-22 06:11 GMT

திருப்பூரில் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு 


கவிஞர் வைரமுத்து கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2026-01-22 06:10 GMT

ரூ.60 கோடி மதிப்பீட்டில் ஒக்கியம் மடுவில் கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப் பாலம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் 


முள்ளக்காடு கிராமத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

2026-01-22 06:08 GMT

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான முக்கிய தகவல் 


தே.ஜ. கூட்டணியில் பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்