தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாப்பாநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை அண்ணாசாலையில் 5 மாடிக்கட்டடம் குலுங்கியதாக கூறி ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். நில அதிர்வு ஏற்பட்டதோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் வெளியேறியதால் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரிக்டரில் பதிவாக அளவுக்கு சென்னையில் நில அதிர்வு வருவது வழக்கம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீமான் வீட்டில் கைது சம்பவத்தில் ஈடுபட்ட நீலாங்கை ஆய்வாளர் பிரவீனுக்கு வேறொரு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்க்ப்பட்டுள்ளது. 2019-ல் வழக்கறிஞர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் பிரவீன் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில் உண்டியலில் காந்தம் வைத்து நூதன முறையில் திருட முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பலமுறை, காந்தம் வைத்து உண்டியலில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார் இளைஞர்.
சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் போதிய அடிப்படை வசதி இல்லை எனவும் உணவில் பூச்சி, புழுக்கள் இருப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார். 1991 ஆம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 57 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் 42-வது மாடியில் நெருப்பு பற்றி எரிந்து வருகிறது. நெருப்பை கட்டுப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளதாக தீயணைப்புதுறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மன்னார்குடி சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது.