மொழி உணர்ச்சி பற்றி தமிழர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெறுப்பை உமிழ்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னை ஐஐடிக்கு வருகை தரும் மத்திய இணை மந்திரி மஜும்தாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 25ம் தேதி ஆங்கில ஆசிரியர் பிரபு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என அப்பள்ளி மாணவர்கள், ஜமுனாமரத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடருவோம். சம்மனை கிழிக்கச் சொன்னது நான்தான். முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்று சீமான் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் பசுபதி ஸ்கேன் மையத்தில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த விவகாரத்தில், ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், செவிலியர்கள் உள்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மராட்டிய மாநிலம் புனே ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டில் உணவருந்தச் சென்றபோது குற்றவாளியை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று மாலை 6 மணிக்கு சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பாலியல் புகாரில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கியிருந்தனர்.
தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதி மறுப்பது நியாயமற்றது என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் பாட்னா, சிலிகுரி உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்க தாக்கம் உணரப்பட்டது.