இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-06-2025

Update:2025-06-28 09:07 IST
Live Updates - Page 4
2025-06-28 03:56 GMT

கொடைக்கானலில் சுற்றுலா பகுதிகளுக்கு அனுமதி

கொடைக்கானலில் காட்டுயானைகள் இடம்பெயர்ந்ததால் வழக்கம்போல 12 சுற்றுலா பகுதிகளுக்கும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

2025-06-28 03:50 GMT

"ஸ்குவிட் கேம்" தொடரின் கடைசி பாகம் வெளியானது!


கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கி இருந்தார். நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.


2025-06-28 03:48 GMT

சென்னை: சாலையில் கார் கவிழ்ந்து விபத்து


இந்த விபத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


2025-06-28 03:47 GMT

ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 100 சதவீத புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன.


2025-06-28 03:45 GMT

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு


இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 2-ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் ஹசரங்கா, சமரவிக்ரமா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


2025-06-28 03:44 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73,452 கனஅடியாக அதிகரிப்பு : ஒரே நாளில் 3 அடி உயர்வு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது 73,452 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


2025-06-28 03:43 GMT

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 3-ந் தேதி வரையில் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-06-28 03:41 GMT

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - இன்று நடக்கிறது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்தார்.


2025-06-28 03:40 GMT

இன்றைய ராசிபலன் - 28.06.2025

மிதுனம்

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

Tags:    

மேலும் செய்திகள்