மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.60,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காந்தி நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மகாத்மா காந்தி 78வது நினைவு நாளை ஒட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்: அதிர்ச்சி வீடியோ - 18 பேரின் உடல்கள் மீட்பு
விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மீட்புக் குழுக்கள் மூலம் இதுவரை போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மீது மோதிய விமானம்: உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் பிளாக் ஹாக் எனப்படும் ராணுவ ஹெலிகாப்டர் மீது அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் ஒன்று பயங்கரமாக மோதியது. ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளன.
ஈரோடு இடைத்தேர்தல்: பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் உள்ள ஓவியங்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை பட்ஜெட் கூட்டத் தொடர்: இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார். இதில், நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓலா, ஊபர் செயலிகளில் இனி ஆட்டோக்களை இயக்க போவதில்லை: வெளியான முக்கிய அறிவிப்பு
ஓலா, ஊபர் நிறுவனங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. விபத்து உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்கள் எந்த இழப்பீடும் வழங்குவதில்லை. எனவே, வருகிற 1-ந் தேதி முதல் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு ஆட்டோக்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். ஓலா, ஊபருக்கு பதிலாக இனி நம்ம யாத்திரி நிறுவனம் மூலம் மட்டுமே வாகனங்களை இயக்க முடிவு செய்துள்ளோம் என்று ஆட்டோ டிரைவர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
டங்ஸ்டன் திட்டம் ரத்து: மதுரையில் மத்திய மந்திரிக்கு இன்று பாராட்டு விழா
அ.வள்ளாலப்பட்டிக்கு நேரில் வந்து டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதியளித்துடன் விவசாயிகள் சங்க பிரநிதிகள் குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க ஏற்பாடு செய்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், சுரங்க திட்டத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பித்த மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கும் அ.வள்ளாலப்பட்டியில் இன்று பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பு விழா நடத்தப்படுகிறது.
பெருங்குடி, கடச்சனேந்தல் மற்றும் அழகர்கோயில் ஆகிய இடங்களில் இருவருக்கும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் அ.வள்ளாலப்பட்டி செல்கின்றனர். அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் மக்களின் வரவேற்பை பெற்று பேசுகின்றனர். விழா முடிந்து அரிட்டாபட்டி வழியாக மதுரை விமான நிலையம் செல்கின்றனர்.
சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகையில், “பெண்கள் அனைத்து துறையிலும் இருக்க வேண்டும். தற்போது பெண்கள் பட்டம் பெறுகிறார்கள், தங்க பதக்கம் பெறுகிறார்கள். ஆனால் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு இடம் குறைவாகவே உள்ளது. பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு தங்க பதக்கம் வென்ற மாணவிகளிடம் பேசுவேன். அப்போது பெண்கள் பலரும் கண்ணீருடன் நான் சென்னைக்கு சென்று படிக்க மாட்டேன் என கூறுவார்கள். சென்னைக்கு சென்று படிப்பது பாதுகாப்பில்லை என தங்கள் பெற்றோர்கள் கருதுவதாகவும், அந்த மாணவிகள் வேதனையுடன் தெரிவிப்பார்கள்.
இதுதான் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினை. சென்னை நகரத்தை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும். படித்த பெண்களுக்கும் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது' என்று அவர் தெரிவித்தார்.