நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு வருவாய் ரூ.12 லட்சம் பெறுபவர்களுக்கு வருமான வரி இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது.
2023-ம் ஆண்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சம் என்ற அளவில் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த உச்ச வரம்பு ரூ.12 லட்சம் என்ற அளவில் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த ஆம்னி பஸ் - 15 பேர் காயம்
திருச்சி மணப்பாறை அருகே ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் இருந்தவர்களை மீட்க உதவினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறும்போது, கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனால் ஒரே விசயம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். வேறெதுவும் மக்களுக்கு தருவதில்லை. ஏழைகள், சிறு வணிகர்கள், விவசாயிகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் எல்லோரும் துன்பத்தில் உள்ளனர். பணவீக்கம் பற்றி பட்ஜெட்டில் பேசுவதே இல்லை என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்திய வர்த்தக சபையின் துணை பொது இயக்குநர் ஷீத்தல் கல்ரோ கூறும்போது, பட்ஜெட் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் ஆகியோர் மீது இந்த பட்ஜெட் அதிக கவனம் கொண்டிருக்கும் என கூறியுள்ளார்.