சற்று குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை
தமிழக அரசியல் சாசனத்துக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு, வழக்கறிஞர் ஜெய சுகின் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார்.
அண்ணா நினைவு நாள்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினரின் அமைதி பேரணி தொடங்கியது. அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைகிறது.
இந்த பேரணியில் துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட திமுகவின் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினரும் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்றனர்
இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கிய என்னுடைய திட்டம் இதுதான் - ஆட்ட நாயகன் அபிஷேக் சர்மா
15 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்ற தம்முடைய குரு யுவராஜ் சிங்கின் ஆசையை இன்று நிறைவேற்றியுள்ளதாக அபிஷேக் தெரிவித்துள்ளார்.
அண்ணா நினைவு தினம்: சென்னை கடற்கரை சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
தி.மு.க. நிறுவனர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் இன்று அமைதி பேரணி நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் இந்த பேரணி நடைபெறும் நிலையில், இதன் காரணமாக அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தையொட்டி கடந்த 31-ந் தேதி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "ஜனாதிபதி, உரையின் இறுதிப்பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்" என்று கூறினார். சோனியா காந்தியின் இந்த கருத்து பா.ஜனதாவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்., 5-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனிடையே, இன்று முதல், வாக்குப்பதிவு தினமான புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல்: அனல் பறக்கும் பிரசாரம் இன்று ஓய்கிறது
மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது. இந்த பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் ஓய்கிறது. எனவே தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது. பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.