இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 03-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 3 Feb 2025 7:03 PM IST
குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்
ராணிப்பேட்டை, சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்ற விவகாரம்
உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளி ஹரி என்பவரை சுட்டு பிடித்த போலீசார்
- 3 Feb 2025 6:00 PM IST
ஏடிஜிபி விவகாரம் - டிஜிபி விளக்கம்
*ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட செயல் இல்லை
*அலுவலகத்தில் தீ விபத்து நடந்தவுடன் டிஜிபி அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்தார்
*தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது
*தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் தீ விபத்து தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம்
- தன்னை கொலை செய்ய சதி என ஏடிஜிபி கல்பனா நாயக் அளித்த புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
- 3 Feb 2025 5:26 PM IST
குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார்:கடந்த காலத்தில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த சிபிஐ, அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்தியது.தற்போது மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவே ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துகிறது - திமுக எம்பி., கனிமொழி
- 3 Feb 2025 4:22 PM IST
மண்டபம் மீனவர்களுக்கு காவல்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு, பிப்.17 வரை காவல்
மீனவர்களை வவுனியா சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு
- 3 Feb 2025 4:21 PM IST
தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு - 2 பேர் கைது
சென்னை, மன்னார்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்
சோதனையின் முடிவில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேரை கைது செய்தனர்
- 3 Feb 2025 2:11 PM IST
காரைக்கால் மீனவருக்கு 9 மாதங்கள் சிறை: ரூ.40 லட்சம் அபராதம்
இலங்கையால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்களில் 9 பேரை இன்று விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9 மீனவர்களில் இரு சிறுவர்களை எச்சரித்தும், 7 பேரை நிபந்தனைகளுடனும் விடுதலை செய்துள்ளது.
அதேசமயம் படகு ஓட்டுநருக்கு மட்டும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 3 Feb 2025 1:42 PM IST
தமிழ்நாடு கவர்னரை நீக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு
ஏற்கெனவே இதுதொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதை சுட்டிக்காட்டி இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
- 3 Feb 2025 1:39 PM IST
கேரள மருத்துவக் கழிவு: பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட உத்தரவு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து, நெல்லை போலீசார் பறிமுதல் செய்த லாரியை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது
- 3 Feb 2025 12:39 PM IST
இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் எப்போது..?
முதலாவது ஒருநாள் போட்டி 6-ம் தேதியும், 2-வது போட்டி 9-ம் தேதியும் 3-வது மற்றும் கடைசி போட்டி 12-ம் தேதியும் நடைபெற உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முனைப்புடன் களமிறங்க உள்ளன.