இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025

Update:2025-12-04 09:00 IST
Live Updates - Page 5
2025-12-04 03:59 GMT

சென்னையில் தண்டையார்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில் துப்புரவு பணி ஒப்பந்தம் ரத்து 


பெரிய வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மயானங்கள், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் அதிகம் கொண்ட பகுதியாகும்.

2025-12-04 03:58 GMT

குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபரில் அறிவிப்பு வெளியாகிறது 


குரூப்-4 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு (2026) அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-12-04 03:57 GMT

2 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின் 


ரஷிய அதிபர் புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2025-12-04 03:55 GMT

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? 


இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,020-க்கும், சவரன் ரூ.96,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2025-12-04 03:53 GMT

ஆஷஸ் 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு 


டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்

2025-12-04 03:35 GMT

12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-12-04 03:34 GMT

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்


உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.

2025-12-04 03:32 GMT

தொடர்மழையால் இயல்புநிலை பாதிப்பு: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 


3 நாட்களாக தொடரும் மழையால் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளநிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

2025-12-04 03:31 GMT

இன்றைய ராசிபலன் (04.12.2025): பொருளாதாரத்தில் உயர்வு உண்டு


தனுசு

பணம் பலவழிகளில் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். நண்பர்களின் பக்கபலம் உண்டு. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

Tags:    

மேலும் செய்திகள்