இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025

Update:2025-02-05 09:09 IST
Live Updates - Page 4
2025-02-05 04:45 GMT

டெல்லி சட்டமன்ற தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 8.10 சதவீதம் வாக்குப்பதிவு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.10 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2025-02-05 04:40 GMT

டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் வாக்களித்தார்.

2025-02-05 04:27 GMT

வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


2025-02-05 04:00 GMT

ஈரோடு இடைத்தேர்தல்: குடும்பத்தினருடன் வாக்கு செலுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது மனைவி, மகன், மகளுடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், " ஈரோடு இடைத்தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும். திராவிட மாடல் அரசின் 4ம் ஆண்டு சாதனைகளே திமுகவின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். மக்கள் அனைவரும் உங்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும்" என்று கூறினார்.



2025-02-05 03:58 GMT

டெல்லி சட்டசபை தேர்தல் - ஜனநாயக கடமையாற்றினார் ராகுல் காந்தி


டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாக்களித்தார். நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் ஜனநாயக கடமையாற்றினார்.


2025-02-05 03:53 GMT

"உங்கள் வாக்கு டெல்லியை மிகவும் வளர்ந்த தலைநகராக மாற்றும்" - மத்திய மந்திரி அமித் ஷா


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்களிக்கப் போகும் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள், பொய்யான வாக்குறுதிகள், மாசுபட்ட யமுனை, மதுபானக் கடைகள், உடைந்த சாலைகள் மற்றும் அழுக்கு நீர் ஆகியவற்றிற்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.


2025-02-05 03:47 GMT

டெல்லி தேர்தல்: ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள் - பிரதமர் மோடி


பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


2025-02-05 03:44 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.


2025-02-05 03:42 GMT

டெல்லி அரியணையில் ஏறப் போவது யார்..? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு


70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று பலப்பரீட்சை நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்