பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

Update:2025-04-05 07:57 IST
Live Updates - Page 2
2025-04-05 11:59 GMT

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பே, டிக்கெட் முன்பதிவில் 'குட் பேட் அக்லி' படம் உலகளவில் ரூ.5 கோடி வரை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 'குட் பேட் அக்லி' படத்தின் டிரெய்லர் நேற்று இரவு 9.15 மணிக்கு வெளியானது. அதிவிரைவாக 1 கோடி பார்வைகளை கடந்த 'குட் பேட் அக்லி' டிரெய்லர் தற்போது வரை யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

2025-04-05 11:22 GMT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் விளையாடிய பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பென் சியர்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 2 ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை பென் சியர்ஸ் படைத்துள்ளார்.

2025-04-05 11:20 GMT

நாமக்கல்லில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் லாரி ஒன்று புகுந்தது. இதில், படுகாயம் அடைந்தவர்கள் ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

2025-04-05 10:46 GMT

சத்தீஷ்காரின் பஸ்தார் பகுதியில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பழங்குடியினரின் வளர்ச்சியை நக்சலைட்டுகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

ஆயுதங்களை போட்டு விட்டு சரணடையுங்கள் என கேட்டு கொண்ட அவர், நக்சலைட்டுகள் கொல்லப்படும்போது, ஒருவரும் மகிழ்ச்சி அடைவதில்லை என்றும் கூறினார்.

2025-04-05 10:45 GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்திருந்த மனு மீது சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதன் முடிவில், விசாரணை ஏப்ரல் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2025-04-05 10:20 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கோவில் ஊழியர் சதீஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆடியோ வெளியான நிலையில் கோவில் இணை ஆணையர் பரணிதரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

2025-04-05 09:59 GMT

புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16112) ரெயில் மதியம் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் . இந்த ரெயில் (இன்று) ஏப்ரல் 05, 2025 முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16111) ரெயில் 4 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும். இந்த ரெயில் ஏப்ரல் 06, 2025 (நாளை) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

2025-04-05 09:38 GMT

ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

2025-04-05 08:25 GMT

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (ஏப்.5ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

2025-04-05 08:15 GMT

இயற்கை பேரிடர் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

தமிழ்நாட்டுக்கு இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக கூடுதலாக ரூ.522.34 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

இதன்படி 2024-ஆம் ஆண்டுக்கான புயல் வெள்ள பாதிப்புகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிதிஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரிக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்