இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

Update:2025-07-09 09:18 IST
Live Updates - Page 2
2025-07-09 09:43 GMT

மக்கள்தான் முடிவு செய்வார்கள்: உதயநிதி

210 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என பழனிசாமி கூறியது குறித்து மக்கள்தான் முடிவு செய்வார்கள் நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம். முதல்-அமைச்சரும் மக்களை சந்தித்து வருகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

2025-07-09 08:17 GMT

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை...அதிர்ச்சியில் திரையுலகம்


பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


2025-07-09 08:14 GMT

"ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா..?" - சென்னை ஐகோர்ட்டு காட்டம்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க முறையிட்டபோது, ஐஏஎஸ் அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என்று தன்னை நினைத்து கொள்கிறாரா..?, எங்கள் அதிகாரத்தை காட்டலாமா? என்று காட்டமாக கூறிய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், “ வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரத்தை கொடுத்திருந்தாலும் அதனை படித்துப் பார்த்து கையெழுத்திட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் அவர் ஆணையராக இருக்கவே தகுதியில்லாதவர்” என்று தெரிவித்தார். 

2025-07-09 07:44 GMT

காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

2025-07-09 07:41 GMT

பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்


தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சோ்க்கை பெற இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது.

மாணவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவா்களின் தரவரிசை ஜூலை 18-ம் தேதி வெளியிடப்படுகிறது.

2025-07-09 07:33 GMT

"கோட்சே கூட்டத்தின் வழியில் செல்லக்கூடாது.." - மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை


திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை 11:15 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது கல்லூரியின் ‘Global Jamalians Block’ கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பவள விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆய்வு கூட்டம், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போதுதான் எனக்கு எனர்ஜி அதிகமாகுகிறது. அதிலும் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு உடனே வருகிறேன் என சொல்லிவிடுவேன்.

காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான பல வழிகள் உள்ளன. ஆனால், மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

2025-07-09 07:08 GMT

திருப்பூர்: ரிதன்யா மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு


அவிநாசி கைகாட்டி புதூரை சேர்ந்த ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரிதன்யாவின் கணவர் மற்றும் மாமனாரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2025-07-09 07:00 GMT

4 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பஸ்களுக்கு தடையா..? அரசுத்தரப்பில் முறையீடு


தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.


2025-07-09 05:55 GMT

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து: கேட் கீப்பர், டிரைவர் உட்பட 13 பேருக்கு சம்மன்


செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் டிரைவர் சங்கர் உட்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 13 பேரும் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் நாளை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025-07-09 05:39 GMT

குஜராத்: பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி - 3 பேர் பலியான சோகம்


குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் இன்று காலை கம்பீரா பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பல வாகனங்கள் மாஹிசாகர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.



Tags:    

மேலும் செய்திகள்