இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 July 2025 7:22 PM IST
திருவாரூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ
கள ஆய்விற்காக 2 நாட்கள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ சென்றுள்ளார். பவித்திரமாணிக்கம் முதல் திருவாரூர் ரயில்வே மேம்பாலம் வரை நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
- 9 July 2025 7:15 PM IST
இனி பட்டாசு ஆலை விபத்து நடக்கக் கூடாது - தேசிய பசுமை தீர்ப்பாயம்
இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது. விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தையும் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல்கள் நடந்திருந்தால் ஆலைகளை மூடுவது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
- 9 July 2025 6:51 PM IST
மெரினா நீச்சல் குளம் ஜுலை 30ஆம் தேதி வரை இயங்காது
பராமரிப்பு பணி காரணமாக மெரினா நீச்சல் குளம் ஜுலை 11 முதல் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
- 9 July 2025 6:49 PM IST
மாநில அந்தஸ்து விவகாரம்: ராஜினாமா கடிதம் அளித்த புதுச்சேரி எம்எல்ஏ நேரு
புதுச்சேரி எம்எல்ஏ நேரு, தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் அளித்தார்; மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி இன்று 6 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட நேரு, தன்னை போல் மற்ற எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
- 9 July 2025 6:46 PM IST
கலைஞர் கோட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகம், அருங்காட்சியகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்த உள்ளார்.
- 9 July 2025 5:14 PM IST
பி.எட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 21 வரை நீட்டிப்பு
பி.எட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு வரும் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவி செழியன் தெரிவித்துள்ளார். www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக பி.எட் சேர்க்கைக்கு மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
- 9 July 2025 4:58 PM IST
நாதக ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி
அஜித்குமார் கொலையைக் கண்டித்து இன்று நடக்க உள்ள நாதக ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. திருப்புவனம் சந்தை திடலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமார் மரணத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கோரி நாதகவினர் வழக்கு தொடுத்தனர்.
- 9 July 2025 4:13 PM IST
என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகருடன் சந்திப்பு
புதுவை துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் - முதல்-மந்திரி ரங்கசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து பேசினர். அதனை தொடர்ந்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி, முதல்-மந்திரி ரங்கசாமியின் அனுமதி பெற்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் செல்வம் கூறினார்.
- 9 July 2025 3:52 PM IST
மீண்டும் வேலைக்குத் திரும்பிய இங்கிலாந்து முன்னாள் பிரதமர்
மீண்டும் வேலைக்கு சேர்ந்தார் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக். 2000ம் ஆண்டு கோல்டுமேன் சாச்சிஸ் ல் தொடக்க நிலை பணியாளராக சேர்ந்து, அங்கு மொத்தமாக 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சீனியர் ஆலோசகர் பணியில் சேர்ந்துள்ளார்.
- 9 July 2025 3:43 PM IST
திருப்பூர் அருகே சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்
திருப்பூரில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த அங்கு தொடர்ச்சியாக 4 சிலிண்டர்கள் வெடித்துள்ளன. உயிர்ச்சேதம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது
















