இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-07-2025

Update:2025-07-09 09:18 IST
Live Updates - Page 3
2025-07-09 05:05 GMT

கடலூர்: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

முன்னதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது. சர்ச்சையான நிலையில் தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2025-07-09 05:01 GMT

மதுரை - ஓபுளா படித்துறைப் பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் தீ விபத்து


மதுரை - ஓபுளா படித்துறைப் பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பேப்பர் குடோனில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவி வருவதால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்துள்ள வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-07-09 04:56 GMT

மேஜர் லீக் கிரிக்கெட்; மழையால் தடைப்பட்ட ஆட்டம்.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வாஷிங்டன் பிரீடம்


2வது இடத்தில் இருந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தொடரில் இன்று (இந்திய நேரப்படி நாளை) நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் -எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதுகின்றன்.


2025-07-09 04:50 GMT

கடலூர்: ரெயில் விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்


கடலூர் செம்மங்குப்பம் ரெயில் விபத்தில் காயமடைந்த மாணவர் விஸ்வேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்

ரெயில் விபத்தில் சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், விஸ்வேஷ் காயமடைந்தார்.

மாணவன் நிமலேஷ் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. 

2025-07-09 04:39 GMT

பொது வேலைநிறுத்தம்: கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை


கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 


2025-07-09 04:29 GMT

தங்கம் விலை குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன..?

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.9,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

2025-07-09 03:58 GMT

கடலூர் ரெயில் விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.


2025-07-09 03:57 GMT

3-வது டெஸ்ட் போட்டி: முகமது சிராஜுக்கு ஓய்வு... அறிமுகமாகும் புதிய வீரர்..? - வெளியான தகவல்


முகமது சிராஜ் முதல் 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியுள்ளதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.


2025-07-09 03:55 GMT

பீகாரில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், புதிய தொழிலாளர் விதிமுறை மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகிய வற்றை கண்டித்து பீகாரில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்துள்ளன. பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இந்த போராட்டத்தில் இணைந்து கொள்கிறார்.


2025-07-09 03:52 GMT

பாரத் பந்த்: தமிழகத்தில் வழக்கம்போல் இயக்கப்படும் அரசு பஸ்கள்


தமிழ்நாட்டில் இன்று அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கும். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்