இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025

Update:2025-10-11 09:52 IST
Live Updates - Page 3
2025-10-11 06:32 GMT

பழனி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோவில் (தண்டாயுதபாணி) உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய இணை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக நிர்வாகிகளும் சாமி தரிசனம் செய்தனர்.

2025-10-11 06:17 GMT

"இட்லி கடை" படத்தில் அந்த காட்சியை பார்த்து அழுதுவிட்டேன்- நடிகர் ஹரிஷ் கல்யாண்\

தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' படம் கடந்த 1ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இட்லி கடை படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

2025-10-11 06:04 GMT

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணைந்து கிராம சபை கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை - மு.க.ஸ்டாலின் பெருமிதம்


கிராம சபை கூட்டங்களில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவில் எந்த முதல்-அமைச்சரும் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை, தமிழ்நாட்டிலேயே 10,000க்கு மேற்பட்ட ஊராட்சி நிலையங்களை இணைய மூலமாக இணைத்து கிராம சபை கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை” என்று கூறி பெருமிதம் தெரிவித்தார். 

2025-10-11 06:01 GMT

புஸ்சி ஆனந்த் 2-வது முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - விரைவில் மதுரை ஐகோர்ட்டில் விசாரணை


புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கேட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.


2025-10-11 05:58 GMT

பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்கள்; தமிழகத்திற்கு எந்த இடம் தெரியுமா?,

இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மற்றும் விரும்ப கூடிய டாப் 10 இந்திய மாநிலங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

2025-10-11 05:58 GMT

ராஜஸ்தான்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர் கைது


பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா, பஞ்சாப், காஷ்மீர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த யூடியூபர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


2025-10-11 05:55 GMT

நவம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள்

தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்" பாலிவுட் படம் வருகிற நவம்பர் மாதம் 28-ம் தேதி வெளியாகிறது.

தீபாவளிக்கு வெளியாகவிருந்த மோகன்லாலின் அகில இந்திய படமான விருஷபா, நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி கேர்ள்பிரெண்ட் படம் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

2025-10-11 05:54 GMT

காஷ்மீரில் இரண்டு ராணுவ வீர‌ர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வார் மலைத்தொடரில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது இரண்டு ராணுவ வீர‌ர்கள் மரணமடைந்தனர்.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் லான்ஸ் ஹவில்தார் பாலாஷ் கோஷ், லான்ஸ் நாயக் சுஜய் கோஷ் ஆகிய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவில், “கடுமையான வானிலையில், துணிச்சலாக போராடிய வீர‌ர்களின் வீரத்தையும் தியாகத்தையும் வணங்குகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-10-11 05:30 GMT

விஜய் தலைமையிலான கூட்டணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் - டிடிவி தினகரன்


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தவெக கொடி காட்டப்பட்டது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 


2025-10-11 04:56 GMT

மகளிர் உலகக்கோப்பை: இலங்கை - இங்கிலாந்து இன்று மோதல்


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்