ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கு பெற வாய்ப்பு குறைவு?
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் 30ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. ஆஸி. அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று தற்போது ஓய்வில் உள்ளார்.
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ; கூடுதல் அவகாசம் - சென்னை ஐகோர்ட்டு
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு நவம்பர் 20ம் தேதி வரை வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில் கிரிக்கெட் மைதானம்.. மம்தா பானர்ஜி அறிவிப்பு
டார்ஜீலிங்கில் புதிதாக கட்டப்பட உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் பெயர் சூட்டப்படும் என மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ரிச்சாவுக்கு டி.எஸ்.பி. அந்தஸ்தில் காவல் பணியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நீதிமன்றத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு; 12 பேர் காயம்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள கேண்டீனில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர். கோர்ட்டில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை
கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
இடங்களை பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களுக்குள் 2 முறை மோத உள்ளன. இதன் முடிவில் முதல் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
பீகார் சட்டசபை தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத வாக்குப்பதிவு
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறு விறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையில் இருந்தே ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கார் வெடிப்புக்கு காரணமானோர் மீது கடும் தண்டனை - ராஜ்நாத் சிங்
இந்த துயரத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லி கார் வெடிப்பு: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாளை (நவ.12) மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனத்த இதயத்தோடு பூடான் வந்துள்ளேன் - பிரதமர் மோடி
சதிகாரர்களை தப்பவிடமாட்டோம். காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.