துல்கர் சல்மானின் "காந்தா" திரைப்படத்திற்குத் தடை கோரி வழக்கு
துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘காந்தா’ படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழகத்தை ஆளும் தகுதியை திமுக அரசு இழந்து விட்டது: அன்புமணி ராமதாஸ் தாக்கு
கோவில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியுள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நமது ஆகப்பெரும் கடமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து செயலாற்றுவோம்.. நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை: 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த போட்டி.. ஆந்திராவுக்கு எதிராக தமிழக அணி தோல்வி
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
டெல்லி கார் வெடிப்பு விவகாரம்: உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் ஆலோசனை
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார்.
பீகார் சட்டசபை தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 31. 38 சதவீத வாக்குப்பதிவு
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறு விறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையில் இருந்தே ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
அவரால் ஏன் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது..? இந்திய முன்னாள் கேப்டன் கேள்வி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்.
டெல்லி கார் வெடிப்பு - உயிரிழப்பு 12 ஆக உயர்வு
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. கார் வெடித்து காயமடைந்தவர்கள் டெல்லி எல்.என்.ஜெ.பி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூத்த உளவுத்துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை செய்கிறார்.
அபிஷன் - அனஸ்வரா நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது!
'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.
விருதுநகர் அருகே கோவிலுக்குள் 2 பேர் வெட்டிக்கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்.