திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தவெக தலைவர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா: வளர்ப்பு நாய் ஓரியோ விளையாட்டாக துப்பாக்கியின் மீது குதித்ததில் தூங்கி கொண்டிருந்த உரிமையாளரின் தொடையில் குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த நிலையில், போலீசாரை உதவிக்கு அழைக்க, அவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். லேசான காயத்துடன் உரிமையாளர் உயிர் தப்பினார். நாயின் கால் (Trigger guard) டிரைகர் கார்ட்-ல் சிக்கி கொண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையில் மார்ச் 19 ஆம் தேதி ஆட்டோ தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. பைக் டேக்சியை தடை செய்ய வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்து பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்த வழக்க்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 வரை அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 22ல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவையில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த வனக்காவலர் உயிரிழந்தார். கடந்த 10ம் தேதி தடாகம் வனப்பகுதியில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் அசோக்குமார் படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் வனக்காவலர் அசோக்குமார் உயிரிழந்தார்.
தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு அரசின் சார்பில் கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம், எடப்பாடி அருகே அரசு பள்ளியில் 2ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பிரான்சிஸ் ஆண்டனி கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் கல்குறிச்சி அரசு பள்ளியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரை பணியில் அமர்த்த கோரி கொட்டும் மழையில் பெற்றோர்களுடன், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டம் நடத்தும் மாணவர்களிடம் காவல்துறையினர், வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கல்குறிச்சி அரசு பள்ளியில் நன்னடத்தை பின்பற்றாததால் ராஜா, சாத்தையா என்ற 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.