தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு இதுவரை ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் பல்வேறு கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தில் அனுமதி பெற்று கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார் ரேவந்த் ரெட்டி.
மத்திய அரசின் தொகுதி மறுவரையை ஏற்க முடியாது என்று தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பாப்பாங்காட்டூர் கிராமத்தில், கார்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறின. இதில் 9 ஆடுகள் உயிரிழந்தன.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாய தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது. தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.
மாவட்ட செயலாளர் எண்ணிக்கையை கூட்ட தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட செயலாளர் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டையும், பெரியாரையும் இழிவுபடுத்துவது ஒன்றிய அரசின் ஒரு வாடிக்கை. இதையே ஒரு கொள்கை முடிவாக வைத்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதியளித்து தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960க்கும் ஒரு கிராம் ரூ.8,120க்கும் விற்பனையாகிறது.
திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.