இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

Update:2025-03-13 09:15 IST
Live Updates - Page 4
2025-03-13 04:19 GMT

தவெக-வின் மாவட்ட செயலாளர்களின் 6ஆம் கட்ட பட்டியலை தவெக தலைவர் விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் வெளியிடுகிறார்.

2025-03-13 04:17 GMT

தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னது அக்கறையோடு.. எங்களை அவமானப்படுத்த அல்ல. எங்களுடைய தந்தையான பெரியார் பேசுவதற்கும், இன்னொருவர் எங்களை காட்டுமிராண்டி என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

2025-03-13 03:57 GMT

சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்றும், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

2025-03-13 03:56 GMT

சென்னை சவுகார்பேட்டையில் விளையாட்டு உபகரணங்கள் கடை உரிமையாளர் சாம்பலாலிடம் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி பைக்கில் எடுத்துச் சென்ற பணத்தை வாகன தணிக்கையின்போது பறிமுதல் செய்தது போலீஸ். பறிமுதல் செய்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொத்தவால்சாவடி போலீசார் ஒப்படைத்தனர்.

2025-03-13 03:56 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்னதான திட்டத்தில் தற்போது தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.44 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்தில் தற்போது ரூ.2,200 கோடி நன்கொடை இருப்பு உள்ளது என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறியுள்ளார்.

2025-03-13 03:55 GMT

பள்ளி மாணவர்கள் ‘போஸ்ட்மெட்ரிக்' கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2025-03-13 03:54 GMT

சென்னையில் மாதம் ரூ.2,000 பஸ் பாஸ் முறையில் ஏசி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்துத்துறை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.  இந்நடைமுறை ஜூன் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போதுள்ள ரூ.1,000 பாஸில் ஏசி பஸ் தவிர்த்து மற்ற பஸ்களில் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-03-13 03:50 GMT

யூடியூப் போன்றவற்றைப் பார்த்து சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்வதுதான் சிறந்தது என்று உலக கிட்னி தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில் நடிகை ரேவதி கூறியுள்ளார்.

2025-03-13 03:47 GMT

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேரை கைது செய்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-03-13 03:46 GMT

தமிழக பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் பொதுமக்கள் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்