இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-10-14 09:26 IST


Live Updates
2025-10-14 12:10 GMT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த மருந்துகள் ஏதேனும் நாடுகளில் கண்டறியப்பட்டால் உலக சுகாதார அமைப்புக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன் இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ கூடாது என்றும் பொதுவாக ஐந்து வயதுக்குள்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது.

2025-10-14 11:14 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சென்னை에서 இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு 15 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில், குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரெயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-ஐ தாண்டியுள்ளது. ஆம்னி பஸ்களை விட ரெயில்களில் கட்டணம் குறைவு என்பதால், வழக்கமான ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் அடுத்ததாக பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க காத்திருக்கிறார்கள். எனவே தீபாவளியை முன்னிட்டு மேலும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2025-10-14 10:45 GMT

திண்டுக்கல் தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக நிர்மல் குமார் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2025-10-14 09:20 GMT

டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ''உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா,'' என அமலாக்கத்துறைக்கு கேள்வி அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

2025-10-14 08:07 GMT

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

2025-10-14 08:05 GMT

கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சுமுக முடிவு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

2025-10-14 07:36 GMT

தேய்பிறை அஷ்டமி... கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் மோகனூர் அசலதீபேஸ்வரர் சிவ ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.

2025-10-14 07:28 GMT

சீனாவில் பள்ளிகளில் முதன்முறையாக... இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்

சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் ஆகியோர், இந்தி பயிற்றுவிப்பாளரான பவ்யா மேத்தாவை ஷாங்காய் நகரில் இன்று கவுரவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்