இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-10-2025

Update:2025-10-14 09:26 IST
Live Updates - Page 2
2025-10-14 07:11 GMT

மலைக்கா அரோராவுடன் நடனத்தில் கலக்கிய ராஷ்மிகா....வைரலாகும் "பாய்சன் பேபி" பாடல்

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது ‘தம்மா ’ படத்தில் நடித்துள்ளார். ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி வெளியாக உள்ளது.

2025-10-14 07:04 GMT

கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் - தவெக நிர்வாகி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தவெக நிர்வாகியும், ஜேப்பியர் தொழில்நுட்ப கல்லூரி தலைவருமான மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

2025-10-14 06:28 GMT

பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி... டிரம்ப் அளித்த பதில் என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்திய கிழக்கு பகுதியில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அப்போது அவர் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு நிருபர்கள் அவரை சூழ்ந்தனர்.

2025-10-14 06:02 GMT

காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதி அமைந்துள்ளது. அம்மாவட்டத்தின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுகோடு பகுதியில் நேற்று இரவு பாதுகாப்புப்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2025-10-14 05:53 GMT

’தீபிகா கேட்டால் கொடுக்கத்தான் வேண்டும்...’ - ஷாலினி பாண்டே

கல்கி 2 மற்றும் ஸ்பிரிட் படங்களில் இருந்து அவர் வெளியேறியதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

2025-10-14 05:38 GMT

டெல்லி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.  இந்த வெற்றியால் டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

2025-10-14 05:32 GMT

6வது நாளாக தொடரும் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

2025-10-14 05:02 GMT

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

2025-10-14 04:57 GMT

அந்த காட்சிக்காக இரவு முழுவதும் பயிற்சி செய்தேன் - மமிதா பைஜு

"டியூட்' படத்தில் சில உணர்ச்சி வாய்ந்த காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகளுக்கான வசனங்களை இரவு முழுவதும் பயிற்சி செய்தேன். அது சவாலாகவும் உற்சாகமாகவும் இருந்தது" என்று மமிதா பைஜு கூறினார்.

2025-10-14 04:51 GMT

கரூர் துயரம்: 41 பேரின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு

கரூரில் விஜய் நடத்தியது முதல் கூட்டம் அல்ல. காவல்துறை சொன்ன 3 மணி முதல் 10 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சரியாகத்தான் அவர் சென்றார். எங்களை கரூர் எல்லையிலேயே போலீசார் வரவேற்றனர். இது எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. அவர்களே எங்களை திட்டமிட்ட ஒரு இடத்தில் கொண்டு நிறுத்தினார்கள். மாவட்ட எல்லைக்கு வந்து அவர்கள் ஏன் வரவேற்க வேண்டும்?.

சம்பவம் குறித்த தமிழக அரசின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சம்பவம் நடந்ததில் இருந்து தி.மு.க. நாடகம் ஆடியது. எங்கள் கட்சியை முடக்க முயற்சிகள் மேற்கொண்டது. அந்த தினத்தில் இருந்து தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. இருந்தாலும் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்தார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் தத்து எடுப்பது என விஜய் முடிவு செய்துள்ளார். அவர்களது வாழ்க்கை முழுவதும் த.வெ.க. பயணிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்