இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025

Update:2025-02-15 09:08 IST
Live Updates - Page 3
2025-02-15 03:50 GMT

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சென்ற கார், பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியதில் காரில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர்.

2025-02-15 03:50 GMT

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு (15, 16 மற்றும் 17 ஆகிய நாட்கள்) புதுடெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வழியாக வாரணாசிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, காலை 5.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து புறப்படும் ரெயில் பிரயாக்ராஜ் நகருக்கு நண்பகல் 12 மணியளவில் வந்து சேரும். இதன்பின்னர், வாரணாசிக்கு பிற்பகல் 2.20 மணிக்கு வந்து சேரும் என வடக்கு ரெயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

இதன்பின்னர், வாரணாசியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் ரெயில் பிரயாக்ராஜ் நகருக்கு மாலை 5.20 மணிக்கு வந்தடையும். பின்னர் புதுடெல்லிக்கு இரவு 11.50 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வார இறுதியில் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

2025-02-15 03:40 GMT

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர்: சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம் சாலை, பிரின்ஸ் அபார்ட்மென்ட் , கணேஷ் தெரு, நாகேஸ்வரா 3வது குறுக்குத் தெரு.

கிழக்கு முகப்பேர்: சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் பிரதான சாலை, ஒலிம்பிக் காலனி, அக்ஷயா காலனி , காமராஜர் தெரு. மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், வி.ஜி.பி நகர் ,பன்னீர் நகர்.

ரெட்ஹில்ஸ்: எம்ஜிஆர் நகர், முத்துமாரியம்மன் தெரு, ஆசை தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ஜ் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர், ஆலமரம் பகுதி, காந்தி நகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்