கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம். தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துகள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
2026 மட்டுமல்ல, 2031, 2036ஆம் ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான். குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் கருத்துகேட்ட விவகாரத்தில் பிற மாநில முதல்வர்களின் கருத்துகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 3306 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர் மட்டம் 108.18 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 75.849 டி.எம்.சி. ஆக உள்ளது.குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் நடந்த ஆகாஷ் இல்ல நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை ஆகாஷ் தயாரித்து வருகிறார்.