இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025

Update:2025-11-17 09:28 IST
Live Updates - Page 3
2025-11-17 04:15 GMT

திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட அறைகள் ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி கோவிலில் உள்ள ஆர்ஜித சேவைகளான சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு 25-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

2025-11-17 04:11 GMT

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படட்டது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2025-11-17 04:08 GMT

நாகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

 சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோன்று, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-11-17 04:06 GMT

சீனா, லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

சீனாவின் ஜின்ஜியாங் நகரில் இன்று அதிகாலை 1.26 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரில் இருந்து வடக்கு வடகிழக்கே 166 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

2025-11-17 04:03 GMT

23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-11-17 04:01 GMT

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.... இன்றைய ராசிபலன் - 17.11.2025

மேஷம்

திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

Tags:    

மேலும் செய்திகள்