இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

Update:2025-04-18 09:21 IST
Live Updates - Page 2
2025-04-18 09:56 GMT

நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.600 கோடி (சந்தை மதிப்பு) மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் நியோமேக்ஸ் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

2025-04-18 09:14 GMT

அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத் தருவோம் - மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இதில், பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும், ரூ.357.43 கோடி மதிப்பில் 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை நாளன்று மாநில முதல்-அமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை எப்படி கலைஞர் பெற்றுத் தந்தாரோ.. அதே போல, மாநில சுயாட்சி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் மூலமாக, அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பெற்றுத் தருவோம்.

மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால்தான், இங்குள்ள மக்களுக்கு தேவையானதை செய்ய முடியும்” என்று அவர் கூறினார்.

2025-04-18 07:56 GMT

அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பை தொடர்ந்து கோவையில் ஆயுர்வேத சிகிசிச்சைக்கு  ஓபிஎஸ் சென்று இருந்தார். இந்தநிலையில், ஆயுர்வேத சிகிசிச்சை முடிந்து வந்த ஓபிஎஸ், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் இன்று லீவு என கூறிவிட்டு சென்றார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் என்.டி.ஏ கூட்டணியில் உள்ளதாக பாஜக கூறி வருகிறது. 

2025-04-18 07:46 GMT

கங்கை ஆற்றில் நண்பர்களுடன் படகு சவாரியில் ஈடுபட்டிருந்த போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-04-18 07:40 GMT

வக்பு சட்ட திருத்த தீர்ப்பு திமுகவிற்கும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி. வேறு எந்த அரசியல் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

2025-04-18 07:24 GMT

மாநில உரிமைகளுக்கான அகில இந்திய முகமாக திமுக உள்ளது. இந்தியாவில் உள்ல எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. அமித்ஷா நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசைதிருப்புவதற்காக ஏதோ பேசிவிட்டு சென்று இருக்கிறார். அமித்ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும் எங்களை ஆள முடியாது என்று திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

2025-04-18 07:16 GMT

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பான ஆட்சியை வழங்கினார். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் சிறப்பான ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

2025-04-18 06:46 GMT

அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக்கூடாது தயவு செய்து எந்த கருத்தும் சொல்லாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். கூட்டணி விவகாரங்களை எல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

2025-04-18 06:04 GMT

அதிமுக - பாஜக கூட்டணி, துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம் போன்றது என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்