வரும் 25ம் தேதி, மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
வருகைப்பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது என மாணவரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.
நாதகவில் இருந்து அக்கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தமிழரசன் விலகுவதாக அறிவித்துள்ளார். சீமான் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாக குற்றம்சாட்டி உள்ளார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஆர்.பி. உதயகுமார் சந்திந்துள்ளார். சமீபத்தில் ஆர்.பி. உதயகுமார் - ஓ.பிஎஸ் இடையே கருத்துமோதல் நடந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மத்திய அரசு கல்வி நிதியை தரவில்லையெனில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்காதது மாணவர்களின் எதிர்கால நலன்சார்ந்த பிரச்சினை. மொழி உரிமை, கல்வி உரிமை எவ்வளவு முக்கியம் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம் என திருச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு. பெஞ்சல் புயல் பாதிப்புக்காக பேரிடர் நிதி வழங்க கோரிக்கை வைத்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. 2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றிற்காக உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2009-ல் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலின் நினைவு நாளில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். ஊர்வலமாக வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்தது காவல்துறை.
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோரை மார்ச் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சம்மன் அனுப்பி உள்ளது.
மும்மொழி கொள்கையை கண்டித்து சென்னையில் உள்ள மாநில கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக வீடுகளின் வாசலில் கோலமிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே!" உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மக்கள் கோலமிட்டனர்.