இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025

Update:2025-06-19 09:36 IST
Live Updates - Page 2
2025-06-19 09:59 GMT

ஏ.டி.ஜி.பி. சஸ்பெண்ட் - சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. தமிழக அரசின் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கு விவகாரத்தை வேறு நீதிபதியை கொண்டு விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

2025-06-19 09:55 GMT

தாய் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி

செங்கல்பட்டு, தாம்பரம் அருகே பிறந்து 13 நாளே ஆன குழந்தை தாய் பால் குடித்தபோது மூச்சுத்திணறி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. காச நோய் காரணமாக தாய் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பால் குடித்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-06-19 09:01 GMT

உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய வேண்டும் - அன்புமணி

உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள 2 எம்எல்ஏக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.சிகிச்சை பெறும் இருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய வேண்டும் என்று ஜி.கே.மணி, அருள் பெயரை குறிப்பிடாமல் சேலம் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசினார். 

2025-06-19 08:15 GMT

மாற்றி அமைக்கப்படும் எல் வடிவ மேம்பாலம்

மத்தியபிரதேசம் போபால் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளான 90 எல் வடிவ ரெயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த எல் Lவடிவ வளைவினால் விபத்துகள் நேரும் என இணையவாசிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் விமர்சித்திருந்தனர். 

2025-06-19 07:43 GMT

மனைவி பெயரால் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்

அபுதாபி: தனது மனைவிக்கு தெரியாமல் அவரது பெயரிலேயே கணவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.35 லட்சம் பரிசு விழுந்ததால் இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த மனைவி ஸ்ரீஜா, 2002 முதல் அங்கு வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இவர்களுக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

2025-06-19 07:37 GMT

அன்புமணி மன்னிக்கப்படுவாரா? ராமதாஸ் பதில்

சென்னையில் பாமக நிறுவனர்  ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் என்றார். அன்புமணி மன்னிப்பு கேட்டுள்ளதால் குழப்பம் தீருமா? அவர் மன்னிக்கப்படுவாரா? என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, போகப்போக தெரியும் என பாடல் பாடி ராமதாஸ் பதில் அளித்தார்.

2025-06-19 07:08 GMT

பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான நிலையத்தின் கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் நடத்திய சோதனையில் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, ஒரே வாரத்தில் 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

2025-06-19 07:04 GMT

கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலை மீண்டும் வரும் - எடப்பாடி பழனிசாமி

2026-ல் கள்ளச்சாராய_திமுகமாடல் ஆட்சி வீழ்ந்து, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும்- இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

2025-06-19 07:01 GMT

ராமதாஸ் மருமகன் பரசுராமன் மருத்துவமனையில் அனுமதி

பாமக நிறுவனர் ராமதாஸ் மருமகன் பரசுராமன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் சிகிச்சையில் உள்ள பரசுராமனை ராமதாஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்