திருப்பதி திருமலையில் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவுதால் மலைப்பாதையில் வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வாகனங்கள் மோதியதில் அடுத்தடுத்து நின்றிருந்த சுமார் 40 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது. ரசாயனம் ஏற்றிச்சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் அருகே லோகோ பைலட்டுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் சப்தகிரி விரைவு ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. லோகோ பைலட் யுகேந்திரன் வயிற்று வலியால் துடித்த நிலையில் நேற்று இரவு திருவள்ளூரில் ரெயிலை நிறுத்தினார். யுகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாற்று லோகோ பைலட் வைத்து ரெயில் இயக்கப்பட்டது
சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே ரெயில் சேவை பாதிப்பு
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின் தடை காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் எண்ணூர் ரெயில் நிலையத்தில் புறநகர், விரைவு ரெயில்கள் ஆங்காங்கே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்கள் செல்வோர், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பேர் வட மாநில இளைஞர்களை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தாக்கிய நபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.