இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

Update:2025-04-22 08:04 IST
Live Updates - Page 4
2025-04-22 04:31 GMT

வரலாறு காணாத உச்சம்: மேலும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?


இன்று (22-04-2025) தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,200 உயர்ந்து சவரன் ரூ.74,320க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.275 உயர்ந்து ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.


2025-04-22 03:32 GMT

சென்னை கோயம்பேடு : போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒய்வுதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்று திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நடைபெற இருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த மாற்று திறனாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

2025-04-22 03:21 GMT

பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா பயணம்

2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா செல்கிறார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை சந்திக்கிறார்.


2025-04-22 02:58 GMT

போப் பிரான்சிஸ் மறைவு: இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இன்றும் (22-04-2025), நாளையும் (23-04-2025) துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


2025-04-22 02:57 GMT

சுப்மன் கில்லின் அனுபவம் எனக்கு உதவுகிறது - சாய் சுதர்சன் பேட்டி

அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “போட்டியின் தொடக்கத்தில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அதனால் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடுவது கடினமாக இருந்தது. அதன் பின் எங்களுக்கு வேகம் கிடைத்தது. நானும் சுபியும் (சுப்மன் கில்) நல்ல தொடர்பு கொண்டுள்ளோம். நாங்கள் எதிரணி வீசும் மோசமான பந்துகளை பயன்படுத்த முயற்சித்தோம்.

சுபியுடன் கம்பெனி கொடுத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். அவருடைய அனுபவம் எனக்கும் உதவுகிறது” என்று அவர் தெரிவித்தார்

2025-04-22 02:53 GMT

நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

இரண்டு ஐதராபாத் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செய்த பணமோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, நடிகர் மகேஷ் பாபுவை ஏப்ரல் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் (ED) சம்மன் அனுப்பி உள்ளது.

2025-04-22 02:46 GMT

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா அண்ணாமலை..? வெளியான தகவல்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


2025-04-22 02:41 GMT

இன்றைய ராசிபலன் - 22.04.2025


ரிஷபம்

தாங்கள் நினைத்த ஒரு காரியம் பலிக்கும். தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். ஆன்மீகப் பணியில் நாட்டம் கூடும். கோவில் பணிகளுக்கு உதவுவீர்கள். கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு வெளியூரில் வேலை கிடைத்து செல்வர்.

Tags:    

மேலும் செய்திகள்