இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025

Update:2025-05-22 09:16 IST
Live Updates - Page 2
2025-05-22 11:49 GMT

விராட் ஓய்வை அறிவித்ததும் அவருக்கு நான் அனுப்பிய மெசேஜ் இதுதான் - ஸ்டோக்ஸ்


கோலி ஓய்வு பெற்றது குறித்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சில கருத்துகளை கூறியுள்ளார்.


2025-05-22 11:46 GMT

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு


கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-05-22 10:45 GMT

தமிழகத்திற்கு ஜுன், ஜுலை மாத பங்காக 40 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும்.டெல்லியில் நடைபெற்ற 40வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

2025-05-22 09:49 GMT

கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 24 முதல் 26ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-05-22 09:41 GMT

"பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்.." - சுப்பிரமணியன் சுவாமி


ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “பாகிஸ்தானை இன்னும் அதிகமாகத் தாக்கியிருக்க வேண்டும்” என்று கூறினார்.


2025-05-22 09:22 GMT

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதிக்கு இறுகும் பிடி - போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு


ஜோதியின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் அவரை மீண்டும் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, அவரை மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை மீண்டும் பாதுகாப்போடு போலீசார் திருப்பி அழைத்து சென்றனர்.


2025-05-22 09:21 GMT

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி


வங்கக்கடலில் வரும் 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது அடுத்த 2 நாட்களில் மேலும் வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-05-22 08:56 GMT

2027 ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும், ஏனெனில் 2027 ஆம் ஆண்டில் சந்திரயான் -4 மற்றும் ககன்யானை ஏவுவதற்கு நாடு தயாராகி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

2025-05-22 08:54 GMT

வங்கக் கடலில் வரும் 27ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2025-05-22 08:51 GMT

ரெயில் பயணியிடம் 30 சவரன் கொள்ளை

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்த பெண் பயணியிடம் 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் காவல் நிலைய போலீசார், ரெயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்ததால், பாதிக்கப்பட்டடவர் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்