பாமகவினர் உண்ணாவிரத போராட்டம்
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஒற்றுமையாக இணைந்து கட்சியை வழிநடத்த வலியுறுத்தி பாமகவினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். தைலாபுரத்தில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முருக பக்தர்கள் மாநாடு; குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்
இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். மாநாட்டையொட்டி சுமார்3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்
புதுக்கோட்டை: கொப்பம்பட்டியில் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் |குழந்தையைப் பெற்றெடுத்தார் பாண்டீஸ்வரி (25). அண்டக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய், சேய் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரசவம் பார்த்த மருத்து உதவியாளர் ரங்கநாயகி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்தன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு இந்திய நேரத்தின்படி இன்று காலை டிரம்ப் உரையாற்றினார். அதில், ஈரானில் வெற்றியுடன் நடத்தி முடித்த ராணுவ தாக்குதலை பற்றி பேசியுள்ளார். அப்போது அவருடன், துணை ஜனாதிபதி வான்ஸ், அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மார்க் ரூபியோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அவர் பேசும்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முன்னணி நாடாக ஈரான் உள்ளது. இந்த நிலை தொடர கூடாது. அதற்கு பதிலாக அமைதி நிலவ வேண்டும்.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது. இதற்காக அமெரிக்க ராணுவத்தினருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டு விட்டன என்று பேசியுள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரில் இறங்கியுள்ளது. அந்நாட்டின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.
ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.
நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என அவர் தெரிவித்து உள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத், பாங்காக், மஸ்கட், தோஹா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் விமானங்களும், சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
மேலும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் அதிக அளவிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் விடுமுறை நாட்களில் ஏறக்குறைய 6 ஆயிரம் பயணிகள் வரை கையாளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி விமான நிலையம் தென் ஆசியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
2025-ம் ஆண்டு ஜனவரியில் புதிய உச்சம் தொட்ட திருச்சி விமான நிலையம், ஏப்ரலில் 1,17,072 சர்வதேச பயணிகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம் ஆகும். இச்சாதனையால் திருச்சி உலகளாவிய இணைப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றுள்ளது.