இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Jun 2025 7:43 PM IST
மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்சினை. நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனது வாழ்வியல் முறைக்கு பிரச்சனை வந்தால் எழுந்து நிற்பேன். அடிப்பேன், இந்து என்பதற்காக நமது கடைகொடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்" என்று கூறினார்.
- 22 Jun 2025 7:18 PM IST
முருகன் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
தீர்மானம் 1 - திருப்பரங்குன்றத்தில் வரும் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்
தீர்மானம் 2 - பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேசன் சிந்தூரை நடத்திய பிரதமருக்கு நன்றி
- 22 Jun 2025 7:18 PM IST
முருகன் மாநாடு - பங்கேற்காத மதுரை ஆதீனம்
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டில் மதுரை ஆதீனம் பங்கேற்கவில்லை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநாட்டு திடலில் அறுபடை முருகன் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார் மதுரை ஆதீனம்
- 22 Jun 2025 6:27 PM IST
முருகன் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு
மதுரை முருகன் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது சேலம் ஆத்தூரை சேர்ந்த பெண் உயிரிழப்பு
சேலம் ஆத்தூரில் இருந்து 20 பேர் பயணித்த வேனில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கவிதா என்ற பெண் உயிரிழப்பு
- 22 Jun 2025 6:05 PM IST
திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு
"திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைகின்றன"
"விளம்பர வெற்றிகளில் மிதக்கிறார் முதல்வர் ஸ்டாலின்"
"அதிமுக கொண்டு வந்த திட்டங்களையே திமுக செயல்படுத்தி வருகிறது - எவ்வித புது திட்டங்களும் கொண்டு வரவில்லை"
"தமிழகத்தை கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக திமுக மாற்றியுள்ளது"
"2026 தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தோல்வியை பரிசு அளிப்பார்கள்"
- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- 22 Jun 2025 5:53 PM IST
- கிண்டியில் 118 ஏக்கரில் தோட்டக்கலை பூங்கா
- சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில்
- தோட்டக்கலை பூங்கா - டெண்டர் கோரிய தமிழக அரசு
- ரேஸ் கிளப்பில் இருந்து நிலம் மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிரம்மாண்ட பூங்கா அமைக்க அரசு முடிவு
- மலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, வண்ணத்துப்பூச்சி தோட்டம்
- உள்ளிட்ட 25 வகையான வசதிகள் உருவாக்கப்பட உள்ளது
- 22 Jun 2025 5:06 PM IST
முருகன் மாநாடு தொடக்கம் - களைகட்டும் கலைநிகழ்ச்சிகள்
முருகன் மாநாட்டில் களைகட்டும் கலைநிகழ்ச்சிகள், மேள தாளங்கள் முழங்க காவடியுடன் நடனமாடி பக்தர்கள் உற்சாகம்
முருகரின் பக்திப் பாடல்களைப் பாடி சிறுவன் அசத்தல்
15 நாட்கள் விரதம் - மாநாட்டில் பங்கேற்றுள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்பு
- 22 Jun 2025 5:06 PM IST
பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் 45 நிமிடங்கள் பேச்சு
பிரதமர் மோடி உடன் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் சுமார் 45 நிமிடங்கள் தொலைபேசியில் பேச்சுஅமெரிக்க தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து பேசினார் ஈரான் அதிபர் பேச்சுவார்த்தையின் மூலம் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஈரான் அதிபர் நன்றி
- 22 Jun 2025 3:57 PM IST
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
ஈரானின் தற்போதைய நிலை தொடர்பாக அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் நடைபெற்று வரும் போர் குறித்த ஆழ்ந்த வருத்தங்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.