இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

Update:2025-11-22 09:04 IST
Live Updates - Page 2
2025-11-22 07:19 GMT

‘மம்தானி சிறப்பாக பணியாற்றுவார்’ - இந்திய வம்சாவளி மேயரை புகழ்ந்த டிரம்ப் 


மம்தானிக்கும் தனக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகிறது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2025-11-22 07:01 GMT

தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்


கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்தது.

2025-11-22 06:39 GMT

இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள்...சாதனை படைத்த நட்சத்திர நடிகை - யார் தெரியுமா? 


தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் வெவ்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

2025-11-22 06:37 GMT

திமுக நிர்வாகி சுட்டுக்கொலை: சட்டம் - ஒழுங்கு சீரழிவு.. அன்புமணி கண்டனம்


திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


2025-11-22 06:24 GMT

கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் 


வரும் 25-ம் தேதி கோவையில் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

2025-11-22 05:58 GMT

தென்காசி: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மாவட்டங்களில் மழை நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் இயல்பான நீர்வரத்தை விட பல மடங்கு அதிகமாக வெள்ளப்பெருக்கு காணப்படுவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் குளிக்க அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

2025-11-22 05:51 GMT

நாம் தமிழர் கட்சியினரின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நெல்லை மாவட்டம் பணகுடியில் நாம் தமிழர் கட்சியின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

நாதக நிர்வாகிகள் சிலர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளநிலையில், நெல்லையில் சீமான் தங்கியுள்ள திருமண மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2025-11-22 05:48 GMT

முகூர்த்த நாள் மற்றும் வரத்து குறைவால் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர்ச்சந்தையில் கிலோ மல்லிகைப்பூ ரூ. 4500 ஆக இன்று விற்பனை ஆகிறது.

தேவை அதிகம் உள்ளதாலும் நாளை சுப முகூர்த்த தினம் என்பதாலும், வரத்து குறைந்திருப்பதும் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன. மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2025-11-22 05:40 GMT

சட்டசபை தேர்தல்: திமுகவுடன் பேச்சு வார்த்தை - குழு அமைத்த காங்கிரஸ் 


அரசல் புரசலாக வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2025-11-22 05:39 GMT

மேகதாது அணை விவகாரம்: விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் 


உரிமைகளை தாரை வார்க்க தி.மு.க. அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்