இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Nov 2025 4:43 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- 22 Nov 2025 2:53 PM IST
திமுக ஆட்சியில் திமுகவினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில், திமுகவினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்? அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் முதல்வர் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 22 Nov 2025 2:52 PM IST
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை 1 கிலோவுக்கு ரூ.1,500 திடீர் என உயர்ந்து ரூ.4,000 க்கு விற்பனையாகி வருகிறது. மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்தபோது, தேவை அதிகம் உள்ளதாலும் நாளை சுப முகூர்த்த தினம் என்பதாலும் விலை உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
- 22 Nov 2025 2:41 PM IST
திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- 22 Nov 2025 2:39 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருடன் அவரது மனைவி வந்திருந்தார். அவர்கள் இருவரையும் வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர். அவர்களை அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
- 22 Nov 2025 1:17 PM IST
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்காட் போலந்து 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் டாக்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
- 22 Nov 2025 1:14 PM IST
இது நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 22 Nov 2025 12:50 PM IST
ரசிகர்களே நோட் பண்ணிக்கோங்க...டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை விவரம்
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
















