டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்லவிருந்த நிலையில் முன்கூட்டியே காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து நேரில் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
வங்காள தேச இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள முகமது யூனஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 2023ல் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடாக ரூ.3,400 கோடியை மைசூர் அரச குடும்பத்திற்கு வழங்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.15.39 ஏக்கர் நிலத்திற்கான இழப்பீடு தொகையை (TTR)டிடிஆர்எனும் மாற்றக் கூடிய மேம்பாட்டு உரிமைத் தொகையாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷியா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தது கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு. பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விவரிக்க இந்தக் குழு பயணிக்கிறது.இதனைத் தொடர்ந்து, லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் இக்குழு பயணம் மேற்கொள்ளவுள்ளது.