இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 May 2025 8:02 PM IST
சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்தது போல் இருந்தது - மு.க.ஸ்டாலின்
சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தது, தனது குடும்பத்தினரை சந்தித்தது போல் இருந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சோனியா காந்தி மற்றும் அன்பு சகோதரர் ராகுல் காந்தியுடனான ஒவ்வொரு சந்திப்பிலும் டெல்லி இல்லத்தில் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது. அது ஒருபோதும் ஒரு வருகையாக உணரப்படுவதில்லை; உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 May 2025 7:38 PM IST
பவானிசாகர் அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு
பவானிசாகர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
- 23 May 2025 7:18 PM IST
ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. காயம் காரணமாக பெங்களூரு கேப்டனாக செயல்பட்டு வந்த ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக களமிறங்க உள்ளார்.
- 23 May 2025 7:11 PM IST
ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகள்; ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு
ஷேர் ஆட்டோக்களில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஏற்றி சென்றால் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
- 23 May 2025 6:38 PM IST
பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்பு
நாளை நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இடைவேளை நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 May 2025 6:23 PM IST
தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன்..? - மத்திய அரசு விளக்கம்
தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காதது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதன்படி புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததால் நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கையெழுத்து இடாவிட்டால் நிதி தரமாட்டோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
முன்னதாக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
- 23 May 2025 6:15 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 May 2025 5:26 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 23 May 2025 5:01 PM IST
அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால்....போலீசாருக்கு கமிஷனர் அருண் எச்சரிக்கை
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீசாருக்கும் அவசர அழைப்புகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
- 23 May 2025 4:59 PM IST
வார இறுதியில் உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் வார இறுதி நாளான இன்று (23.5.2025 வெள்ளிக்கிழமை) உயர்வுடன் நிறைவடைந்தது.