இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-03-2025

Update:2025-03-24 09:21 IST
Live Updates - Page 2
2025-03-24 09:37 GMT

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடந்தது. இதில், மலை மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம் என தெரிவித்த நீதிபதிகள், கடவுள்கள் சரியாகதான் இருக்கிறார்கள், சில மனிதர்கள் சரியாக இல்லை என்றும் கூறினர்.

2025-03-24 09:09 GMT

தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பேசும்போது, சட்டத்திற்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்லவில்லை. கனிம வளங்கள் கொள்ளை போகிறது என இனிமேல் யாரும் சொல்ல முடியாது. நம்முடைய அனுமதி இல்லாமல் ஒரு கல்லை கூட எடுத்து செல்ல முடியாது. இதுவரை 21 ஆயிரம் வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

2025-03-24 07:27 GMT

பெப்சி முறையாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை

தான் இயக்கிய வெப் சீரிஸை வெளியாக விடாமல் சிலர் தடுக்கின்றனர்

ஹார்டு டிஸ்கை கொடுக்க ரூ.1.20 லட்சம் பணம் கேட்கின்றனர்

ஹார்டு டிஸ்கை வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன்"

- நடிகை சோனா

2025-03-24 06:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்

பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் போது விபரீதம்

சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

2025-03-24 06:00 GMT

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்கு-சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி நேரில் ஆஜர்

இருவரும் மனமுவந்து பிரிவதாக கூறியதை அடுத்து விசாரணை ஒத்திவைப்பு-இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்

2025-03-24 05:38 GMT

"தமிழ்நாட்டு எம்.பி.க்கள் குழு விரைவில் பிரதமரை சந்திக்கும்" தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2025-03-24 05:16 GMT

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 11 நபர்கள் கைது - 31 டிக்கெட்கள் பறிமுதல்

நேற்று சேப்பாக்கத்தில் நடந்த சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்து 9 நபர்கள் கைது

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்து இரண்டு நபர்கள் கைது

11 நபர்களிடம் இருந்து ரூ.53,350 பறிமுதல்

2025-03-24 05:11 GMT

தேனி - மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. விரைவு படுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

மத்திய  அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பதில்

2025-03-24 04:55 GMT

“சிறைக்கு அஞ்சாத நெஞ்சங்கள் தான் திமுகவில் உள்ளவர்கள்“

"ஆதாரமில்லாமல் அண்ணாமலை கருத்துகளை தெரிவிக்கிறார்"

கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகளை கற்றுக்கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா - அமைச்சர் சேகர்பாபு

Tags:    

மேலும் செய்திகள்