திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்திலுள்ள தனது இருக்கையில் அமர்ந்து மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். டெல்லியில் இன்று மாலை முக்கிய தலைவர்களை சந்திக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டோம் என்று மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்.
நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக அமெரிக்காவில் உள்ள சுமார் 9 ஆயிரம் ஊழியர்களை பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை தவிர்க்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு இன்று அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் 10 காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த ரூ.60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு இன்று அறிவித்து உள்ளார்.
நீலக்கொடி கடற்கரை திட்டம் மூலம் 6 கோடி செலவில் மெரினா கடற்கரை மேம்படுத்தப்பட உள்ளது. வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பாராட்டு தெரிவித்த மாநில முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், வீரர்களின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன். நக்சலைட்டுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக எங்களுடைய அரசும், பாதுகாப்பு படையினரும் போராடி வருகின்றனர். வெற்றியும் பெறுகின்றனர் என கூறினார்.
நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி மறைவிற்கு ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். கராத்தே வீரரும், வில்வித்தை பயிற்சியாளருமான ஹுஸைனி காலமானர் என்ற செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 இடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.