கோட்டூர்புரத்திலுள்ள முதல்-அமைச்சரின் உதவி மையத்தில் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, கோட்டூர்புரத்திலுள்ள முதல்-அமைச்சரின் உதவி மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். விஷால் மேலும் கூறும் போது, “அரசியல் கொடிகளில் பல நிறங்கள்தான் தெரிகிறது. ஆக்கப்பூர்வமானதாக எதுவும் தெரியவில்லை. நடிகர் சங்க கட்டட பணிகள் 2 மாதங்களில் முடியும். விஜயகாந்த் அரசியலில் இருந்து இருந்தால் 2026 தேர்தல் களம் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்” என்று தெரிவித்தார்
தேசிய ஆசிரியர் விருது - தமிழகத்தில் இருவர் தேர்வு
தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் - பெற்றுக்கொள்ள நடிகர் ரவி மோகன் மனுப்பு
சென்னை ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசை பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளார். 10 மாதங்களாக தவணை செலுத்தாத நிலையில் பங்களாவை ஜப்தி செய்ய எச்டிஎப்சி வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கொரியர் ஊழியர் கொண்டு வந்த நோட்டீசை பெற்றுக் கொள்ள நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்து வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ஊழியரை திருப்பி அனுப்பினர்.
திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 பேரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய புகாரில் திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 வீடுகள் மீது தாக்குதல் என புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த சிறைத்துறை காவலர் இளங்கோ உள்ளிட்டோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூச்சுக்குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே மூச்சுக்குழாயில் வண்டு கடித்து 1 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை உயிருடன் உள்ள வண்டை பிடித்து விழுங்கியுள்ளது. இதில் குழந்தையின் மூச்சுக்குழாயில் வண்டு கடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
கேரளா - பாலியல் புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட்
நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உள்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வும் கேரள முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் மம்கூத்ததில் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை
ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது. தனி நபரோ (அ) கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை என்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.