இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

Update:2025-09-25 09:10 IST
Live Updates - Page 6
2025-09-25 03:46 GMT

சமூக வலைதளங்களில் தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் “விஜய்”


சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள். நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலேயே, அவர்களுக்கான ரசிகர்கள் எவ்வளவு என்பதை கணிக்கலாம். அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர்களில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் முதல் இடம் பிடித்துள்ளார்.


2025-09-25 03:44 GMT

விஜய்யின் சுற்றுப்பயணம் நீட்டிப்பு.. ஞாயிற்றுக்கிழமையும் பரப்புரை செய்ய முடிவு


தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-09-25 03:43 GMT

“தமிழகத்தில் 2-ம் இடத்துக்குதான் போட்டி, முதல் இடத்தில் அ.தி.மு.க.” - விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக பதிலடி


சமீபத்தில் விஜய் அவர் பிரசாரத்தில் பேசும்போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.சு., த.வெ.க. இடையேதான் போட்டி என்று தெரிவித்து இருந்தார்.


2025-09-25 03:41 GMT

திருமணத் தடைகள் நீங்கும்... எந்த ராசிக்கு தெரியுமா? - இன்றைய ராசிபலன்- 25.09.2025

மிதுனம்

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சொத்துப் பிரச்சினை தீரும். சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமைக்கு குறைவில்லை. உடல் உழைப்பு அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

Tags:    

மேலும் செய்திகள்