ரென்ஷா அரைசதம்: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன் எடுத்தார்.;

Update:2025-10-25 12:33 IST

Image Courtesy: @BCCI

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் கண்டனர்.

இதில் ஹெட் 29 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து மேட் ரென்ஷா மற்றும் மேத்யூ ஷார்ட் ஜோடி சேர்ந்தனர். இதில் ரென்ஷா ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் மேத்யூ ஷார்ட் 30 ரன், அலெக்ஸ் கேரி 24 ரன், மிட்செல் ஓவன் 1 ரன், ஸ்டார்க் 2 ரன், நாதன் எல்லீஸ் 16 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ரென்ஷா 56 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்